Sunday, August 28, 2016

On Sunday, August 28, 2016 by Tamilnewstv in
திருச்சி 28-08-2016                    சபரிநாதன் 9443086297
2020ஆம் ஆண்டிற்குள் 200 கிளைகள் உருவாக்க உள்ளதாக டாக்டர்.அகர்வால்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

திருச்சி சாஸ்திரி ரோட்டில் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இன்று திறக்கப்பட்டது. இந்த புதிய கிளையினை நடிகை ஸ்ரேயா சரண் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது….. கண் தானம் செய்துள்ளேன். அதன் பின்னர் உடல் உறுப்பு தானமும் செய்துள்ளேன். நம் நாட்டில் கண் பார்வையற்றவர்கள் இல்லாத நிலை நிலவ வேண்டும் என்று கூறினார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அமர் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது…… அடுத்து 36 மாதங்களில் எங்களின் மருத்துவமனை கிளைகளின் எண்ணிக்கையை 50லிருந்து 150 ஆக மாற்ற உத்தேசித்து உள்ளோம். வரும் 2020ஆம் ஆண்டு 200 மருத்துவமனை என்ற இலக்கை எட்டி விடுவோம். 25 மில்லியன் மைக்ரோன் அளவு கண்ணின் பாகத்தை பெற்று பார்வையற்றோருக்கு பொருத்தி கண் பார்வை பெறச்செய்யும் அளவிற்கு எங்கள் மருத்துவமனையில் நவீன தொழில் நுட்பம் உள்ளது என்று கூறினார்.

பேட்டி: அமர் அகர்வால் - நிர்வாக இயக்குனர்

           ஸ்ரேயாநடிகை