Thursday, August 11, 2016

On Thursday, August 11, 2016 by Tamilnewstv in
திருச்சி 11.08.16           சபரிநாதன் 9443086297

 திருச்சி பணியினபோது இறப்பு விகிதத்தை தடுக்க - 5300 ரயில்வே தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று துவங்கியது திருச்சி பொன்மலை பணிமனையில் தமிழகம் வெளிமாநிலங்களை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 5300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 35 க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளின் Pழ் பணிபுரிகின்றனர். ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் உடல் நலனில் அக்கரைக் கொண்டு உடல் பரிசோதனை செய்து கொள்வதில்லை எனவும்ää மேலும் நேரமின்மையும் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இதனால் ரயில்வே தொழிலாளர்கள் உடல் நலக்குறைவினால் பணியின் போதே இறக்க நேரிடுகிறது. இதனை தடுக்கும் விதமாக எஸ்.ஆர்.எம்.யூ பொதுச் செயலாளர் முனைவர் கண்ணைய்யா அறிவுறுத்தலின்படி 6 மாதங்கள் வரை தொடர்ந்து நடைபெறும் இரயில்வே தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திருச்சி பொன்மலை பணிமனையில் இன்று துவங்கியது. இந்நிகழ்ச்சிக்கு பொன்மலை பொறுப்பாளரும் துணை பொதுச் செயலாளருமான எஸ். வீரசேகரன் தலைமைவகித்தார். திருச்சி பொன்மலை முதன்மை பணிமனை மேலாளர் பி.சுரே~; சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை முகாமை துவக்கிவைத்தார். இம்முகாமில் ரயில்வே மருத்துவமனை மருத்துவர்கள் சொளந்தரராஜன் உலகநாதன் பாஸ்கரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் செவிலியர்கள் இரயில்வே ஊழியர்களுக்கு இரத்த அழுத்தம் சர்க்கரை அளவு இசிஜிகண்பார்வைக் கோளாரு உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர். பரிசோதனையின் போது குறைபாடுகள் கண்டறியப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகைச்சைகளும் அளிக்கப்பட்டது. இந்திய ரயில்வேயில் தொழிலாளர்களுக்கான அங்க Pகரிக்கப்பட்ட சங்கமானஎஸ்.ஆர்.எம்.யூ சார்பில் நடத்தப்பட்ட இம்மருத்துவ முகாமில் பாகுபாடின்றி பல்வேறுசங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்வமுடன் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.