Thursday, August 11, 2016

On Thursday, August 11, 2016 by Tamilnewstv in

திருச்சியில் போலி ஓட்டுநர் உரிமம் தயாரித்து கொடுத்த  நால்வரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்த ஷேக்ஸ்பியர் என்பவர் தனக்கு ஹெவி லைசென்ஸ் வேண்டி திருச்சி கிழக்கு  வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகினார். அப்போது அங்கிருந்த சஞ்சீவி நகரை சேர்ந்த வீரராஜ் என்பவர் மகன்  சிவக்குமார் என்பவர் தான் இங்கு புரோக்கராக உள்ளதாகவும் தனக்கு அந்த அலுவலகத்தில் அனைவரும் பழக்கம் என்று நம்பும்படி கூறியுள்ளார். இதனை நம்பி ஷேக்ஸ்பியர் லைசென்ஸ் பெற ரூபாய் 15 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளார். மேலும் தான் முன்னர் வாங்கிய லைசென்ஸ் ஒரிஜினலையும் தந்துள்ளார். அதனைப்பெற்றுக்கொண்ட சிவக்குமார் தனது நண்பர்கள்  சுப்ரமணிää மதிவாணன்ää மற்றும் ராஜா என்ற ராஜலிங்கம் ஆகியோர் துணையுடன் லைசென்ஸ் தயாரித்து கொடுத்தார்.

இந்நிலையில் ஷேக்ஸ்பியருக்கு சொந்;தமான வாகனம் சிறிய விபத்தொன்றில் சிக்கி சேதமடைந்ததுஇதiனைத்தொடர்ந்து அவர் தனியார் இன்சு10ரன்ஸ் நிறுவனத்தில் விபத்து குறித்து மனு அளித்து இழப்பீடு கேட்கவே அந்த இன்சு10ரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க ஆவணங்களை சரிபார்த்த போது அவரின் லைசென்ஸ் மற்றும் ஆவணங்கள் போலியானது என தெரியவந்ததையடுத்து இழப்பீடு வழங்க மறுத்து விட்டது.

தான் ஏமாற்றப்பட்டதையறிந்த ஷேக்ஸ்பியர் இது குறித்து திருச்சி கோட்டை காவல் சரக உதவி ஆணையர் ரவிச்சந்திரனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் மோகன் ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் அவர்கள் 4 பேரும் கூட்டாக இதேப்போன்று 40 க்கும் மேற்பட்டவர்களிடம் போலியாக ஹெவி லைசென்ஸ் தயாரித்து தந்திருப்பது தெரியவந்தது.

இவர்களின் இலக்கு பெரும்பாலும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள் தான். லாரி டிரைவர்கள் கல்வித்தகுதி 3 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையே இருக்கும். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இந்த கும்பல் அவர்களை அணுகி ஹெவி லைசென்ஸ் வாங்கித்தருகிறோம் என்றுக்கூறி போலியாக லைசென்ஸ் தயாரித்து தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரும் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 1நீதிபதில் கௌதமன் முன்னிறுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.