Tuesday, September 13, 2016

On Tuesday, September 13, 2016 by Tamilnewstv in
திருச்சி 13.9.16                சபரிநாதன் 9443086297
நீதி மன்ற தீர்ப்பை இரு அரசும் மதித்து நடக்க வேண்டும் அது தான் இந்திய ஒருமைப்பாட்டிற்கு சிறந்தது காதர்மைதீன் பேட்டி
திருச்சி மாவட்டத்தில் ப்க்ரீத் பெருநாள்இந்திய முஸ்லீம் லீக் தலைவர் காதர் மைதீன் தலைமையில் தொழுகை நடைபெற்றது

முஸ்லீம் லீக் தலைவர் காதர் மைதீன் கூறுகையில் இஸ்லாமியர்கள் பண்டிகை பெருநாளில் ஒன்றான பக்ரீத் தியாகத் திருநாள் பண்டிகை முஸ்லிம்களால் இன்று கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் இறைவனின் ஆணைப்படி முஹம்மது நபி அவர்கள் காட்டி தந்த வழிகாட்டுதலின்படி காலை முன்பாகவே பெருநாள்; சி;றப்பு தொழுகையை தொழுதுவிட்டு தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக நம்மிடையே வளரும் வீட்டு பிராணிகளை ஆடு மாடு ஆகியவற்றை இறைவனுக்கு பலியிட்டு படைத்து மாமிசத்தை குடும்பத்தாறும் உறவினர்களும் ஏழைகளும் பங்கிட்டு பெருநாளை கொண்டாட வேண்டும் அதன் அடிப்படையில் பக்ரீத்பண்டிகை கொண்டாப்படுகிறது என்றும் கர்நாடகா அரசு வன்முறையை தூண்டுவது சரியல்ல என்றும் நீதி மன்றத்தில் தீர்ப்பு வழங்கியது என்றால் நீதி மன்றத்தில் தான் தீர்வு காண வேண்டும் என்றும் தெருவில் அடித்துகொல்லக்கூடாது என்றார் இப்படிப்பட்; வன்முறையி;ல் கர்நாடகா மற்றும் தமிழகம் கையாளக்கூடாது என்று கூறினார்.