Wednesday, September 14, 2016

On Wednesday, September 14, 2016 by Tamilnewstv in
திருச்சி 14.9.16
தமிழக முதல்வரை அவமானப்படுத்திய கர்நாடக முதல்வரின் உருவபொம்மையை சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே  எரிக்க முயன்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்கட்சியினர்
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான்பாண்டியன் வழியுறுத்தலின் பேரில் தமிழகம் எங்கும் ஆர்பாட்டம் நடைபெறுகிறது அதன் ஒரு பகுதியாக சத்திரம் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகேயும் ஆர்பாட்;டம் நடைபெற்றது
அப்பொழுது மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில் தமிழக முதல்வரை அவமானப்படுத்தி பேசிய கர்நாடக அரசை கண்டித்தும் தமிழர்களின் மீது வன்முறை தாக்குதல் கர்நாடக அரசை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது என்றார்.
ஆர்பாட்டத்தி;ல் திடீர் என்று கர்நாடக முதல்வரை கண்டிக்கும்வகையில் கர்நாடக முதல்வரின் உருவபொம்மை எரிக்க முயன்றனர் இச்சம்பவம் அண்ணாசிலை அருகே பரபரப்பு ஏற்ப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்; செயலாளர் ரஜேந்திரன் தலைமைதாங்கினார். மாவட்ட தலைவர் ராஜலிங்கம் மாவட்ட பொருளாளர் செல்வம் மாநகர செயலாளர் முகிலன் மாநகர இளைஞரணி  செயலாளர் ரமேஷ்  மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ராமு திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் கார்த்தி துறையூர் ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேட்டி ரஜேந்திரன்