Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    

திருப்பூர் மாநகரில் வருகின்ற 08.09.216 அன்று நடக்க விருக்கும் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்துக்கு இடையுறு இல்லாதவாறு திருப்பூர் மாநகர காவல் துறையால்   கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

1. அவினாசியிலிருந்து திருப்பூர் வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் பூண்டியிலிருந்து ரிங்ரோடு, பூலுவபட்டி, வழியாக புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.

2. திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியே செல்லும் அனைத்து வெளியூர் (திருச்சி, கோவை, மதுரை) பேருந்துகள் அனைத்தும் பூலுவபட்டி சென்று ரிங்ரோடு வழியாக அந்தந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும்.

3. காங்கேயம் வழியாக திருப்பூர் வரும் அனைத்து பேருந்துகளும் நல்லூர், வழியாக பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.

4. தாராபுரம் வழியாக திருப்பூர் வரும் அனைத்து பேருந்துகளும் கோவில்வழி, வழியாக பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.

5. பல்லடத்திலிருத்து திருப்பூர் வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் வீரபாண்டி பிரிவிருந்து பழவஞ்சிபாளையம் வழியாக கோவில்வழி, பூலுவபட்டி சென்று புதிய பேருந்து நிலையம் அடைய வேண்டும்.

6. மங்கலம் வழியாக திருப்பூர் வரும் பேருந்துகள் அனைத்தும் ஆண்டிபாளையம் பிரிவு, வித்யாலயம் வழியாக பல்லடம் சாலையை வந்தடைய வேண்டும்.

7. அனைத்து வெளியூர் பேருந்துகளும் 08.09.2016 அன்று பழைய பேருந்து நிலையம் செல்ல அனுமதியில்லை.

8. அனைத்து உள்ளூர் பேருந்துகளும் ஊர்வலபாதைக்கு ஏற்றாற்போல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வழித்தடம் மாறுதல் செய்யப்படும்.
என திருப்பூர் மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

0 comments: