Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Tamilnewstv in
திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது... இந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே வாசன் மாநில தலைவர் வருகை தந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது அவர் கூறுகையில் 
இயக்கத்தின் பலத்தை நிருபிக்கிற வகையில் நடைபெறுகிறது... தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினையாக முபெ, காவிரி பிரச்சினை இருந்து வருகிறது... உச்சநீதி மன்றம் 15,000 கன அடித் தண்ணீர் வழங்க வேண்டும் என கூறி உள்ளது... இந்த தண்ணீர் பத்தாது... 92 டிஎம்சி கொடுத்திருக்க வேண்டும்... உச்சநீதி மன்ற உத்திரவுப்படி கர்நாடக அரசு கண்டிப்போடு தண்ணீர் அளவை திறக்க வேண்டும்... மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்... கூட்டாட்சிக்கு எதிரான அரசாக கர்நாடக அரசு செயல்படுகிறது... விவசாய அமைப்புகளை சித்தாரமையா தூண்டி விடுகிறார்... இது ஏற்புடையதல்ல... தண்ணீர் இல்லை என கூறுவது பொய்... மூன்று போகம் இரு போகமாக குறைந்திருக்கிறது... அங்கு இருக்கிற பாரதிய ஜனதாவும் துணையாக செயல்படுகிறது... உச்சநீதி மன்ற உத்தரவை மதிக்காத ஒருவர் எப்படி பதவியில் இருக்கிறார் என்பது தெரியவில்லை... உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு ஏற்க வேண்டும்... உச்சநீதிமன்ற உத்தரவு படி வருகிற தண்ணீர் குடிநீருக்கு பத்தாது... தமிழக விவசாயிகளை மேலும் வஞ்சிக்க கூடாது... பத்து நாட்களாக முறையாக தண்ணீர் விட வேண்டும்... சட்டத்தை மதிக்க வேண்டும்... தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பே அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டியிருக்க வேண்டும்... இது தானே அவர் ஏற்படுத்தியிருக்கிற நாடகம் தான்... மத்திய அரசு பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்கள் என்கிற சந்தேகம் ஏற்படுகிறது... சட்டமன்றத் தேர்தலுக்காக செயல்படக்கூடாது... தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டும் என வலியுறுத்துவதை நிராகரிப்பது வருத்தம் தருகிறது... உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடருமா என்கிற கேள்விக்கு கட்சியின் அடிமட்ட தொண்டர்களை சந்தித்து மண்டலக் கூட்டங்கள் நடத்தி உள்ளாட்சித் தேர்தல் பணிகளை தொடங்கி  ஊக்கப் படுத்தி இருக்கிறேன்... கூட்டணி அமையுமா அமையுதா என்பதை பின்பு சிந்திப்போம்... ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியில் காவிரிப் பிரச்சினையில் எனது நிலைப்பாடு எல்லோருக்கும் தெரியும்... உள்ளாட்சித்தேர்தல் நேர்மையாக ஜனநாயக அடிப்படையில் நடக்க வேண்டும்... உண்மையான தொண்டர்கள் என்னோடு இருக்கிறார்கள்...

இந்த பேட்டியின் போது திருச்சி வடக்கு மாவட்டத் தலைவர் நந்தா கே.செந்தில்வேல் , திருச்சி டி.குணா, திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர், புலியூர் நாகராஜன் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் உடனிருந்தனர்..