Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

டி.யூ.ஜே கண்டனம் !

காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.கல்லூரியில் செய்தி சேகரிக்க சென்ற ஜீனியர் விகடன் செய்தியாளர் ஜெயவேல் என்பரை கல்லூரி நிர்வாகம் செல்போன், கேமரா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து செய்தியாளர் ஜெயவேலை கல்லூரிக்கு கடத்திச்சென்று கல்லூரியில் வைத்துள்ளனர்.

காவல்துறைக்கு தகவல் தந்தபுன்பு, செய்தியாளர் ஜெயவேலை காவல்துறையினர் மீட்டனர்.

இச்செயலை டி.யூ.ஜே வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை உடனே கைது செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பத்திரிகையாளர்களுக்கு  பணிப்பாதுகாப்பு மட்டுமல்ல, உயிர் பாதுகாப்புகூட இல்லாத நிலை தற்போது இருந்து வருகிறது.

டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநிலத் தலைவர்
டி.யூ.ஜே

0 comments: