Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கும்போது, ரயில் புறப்பட்டதால் குழந்தையுடன் தண்டவாளத்துக்குள் விழுந்த தாயின் கால் துண்டானது. குழந்தை பரிதாபமாக இறந்தது.

சென்னை கே.கே.நகரில் வசிப்பவர் சிங்காரவடிவேலன்(37). கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி லட்சுமி(33), இவர்களின் ஒன்றரை வயது பெண் குழந்தை ஏகாஸ்ரீ. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிங்காரவடிவேலன் குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்குச் சென்றார். மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் இரவு, தஞ்சாவூரில் இருந்து சிங்காரவடிவேலன் குடும்பத்துடன் ஏறினார். எஸ்.4 முன்பதிவு பெட்டியில் அவர்கள் பயணம் செய்தனர். இந்த ரயில் நேற்று காலை 5.32 மணிக்கு சென்னை மாம்பலம் ரயில் நிலையத்துக்கு வந்தது.   

அப்போது, பை மற்றும் உடமை களுடன் சிங்காரவடிவேலன் முதலில் இறங்கி விட்டார். குழந்தையுடன் லட்சுமி இறங்குவதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. இதனால் நிலை தடுமாறிய லட்சுமி, குழந்தையுடன் தவறி விழுந்தார். ரயில் பெட்டிக்கும்-நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளி வழியாக அவர் தண்டவாளத்துக்குள் விழுந்து விட்டார். கணவர் கண் முன் நொடிப்பொழுதில் இந்த சம்பவம் நடந்தது. சிங்காரவடிவேலனும், மற்ற பயணிகளும் இதைப் பார்த்து கூச்சல் போட்டனர். ஆனால் ரயில் நிற்காமல் சென்று விட்டது.

ரயில் சென்றதும் தண்டவாளங்க ளுக்கு இடையில் லட்சுமியும் குழந்தை யும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து சிங்காரவடிவேலன் கதறி துடித்தார். குழந்தையின் உடலில் ரயில் ஏறி இறங்கியிருந்ததால் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே குழந்தை பலியாகி விட்டது. லட்சுமியின் இடது காலில் ரயில் ஏறியதில் இடது கால் முட்டிக்கு கீழ் துண்டாகி விட்டது. வலது காலும் கடுமையாக சேதம் அடைந்து இருந்தது. பயணிகளும், போலீ ஸாரும் லட்சுமியை மீட்டு, 108 ஆம்பு லன்ஸ் மூலம் ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். குழந்தை ஏகாஸ்ரீ உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: