Thursday, September 29, 2016

On Thursday, September 29, 2016 by Unknown in    

திருப்பூர்திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் ஓட்டுப்பெட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.உள்ளாட்சி தேர்தல்திருப்பூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், 170 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2,295 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என்று 2,747 பதவிகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 17–ந்தேதி மற்றும் 19–ந்தேதி ஆகிய 2 நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 26–ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.ஊரக பகுதியில் 1,636 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. இதில் இரட்டை உறுப்பினர் கொண்ட 714 ஊராட்சி வார்டுகள் உள்ளன. ஊரகப்பகுதியை பொருத்தவரை ஒரு வாக்காளர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும். 714 ஊராட்சி வார்டுகளை சேர்ந்தவர்கள் மட்டும் 5 பதவிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.ஓட்டுப்பெட்டிகள்

இதனால் பழைய முறைப்படி, வாக்குச்சீட்டுகளும், அவற்றை போட இரும்பு பெட்டிகளும் பயன்படுத்தப்பட உள்ளன. சாதாரணமாக ஒரு வார்டில் 5 வேட்பாளர்கள் இருந்தால் கோத்ரெஜ் வகை பெட்டியில் 500 வாக்குச்சீட்டுகளும், டான்சி வகை நடுத்தர பெட்டியில் 1200 வாக்குச்சீட்டுகளும் போட முடியும். இதுவே டான்சி வகை சிறப்பு பெட்டியாக இருந்தால் 10 வேட்பாளர்கள் ஒரு வார்டில் போட்டியிட்டால் கூட ஒரு பெட்டியில் 1600 வாக்குச்சீட்டுகள் போட முடியும்.இதனால் வார்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே எந்த வகையான ஓட்டுப்பெட்டிகளை அந்த வார்டில் பயன்படுத்துவது என்று நிர்ணயிக்க முடியும். திருப்பூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பயன்படுத்த, 3,183 கோத்ரெஜ் வகை இரும்பு பெட்டிகளும், 2,168 டான்சி வகை நடுத்தர பெட்டிகளும், 1,900 டான்சி வகை சிறப்பு பெட்டிகளும் என்று 7,251 ஓட்டுப்பெட்டிகள் கையிருப்பில் உள்ளன.கூடுதல் பெட்டிகள்

கிராம பகுதிகளை பொருத்தவரை கட்சி பாகுபாடு இன்றி ஏராளமானோர் சுயேட்சையாக போட்டியிடுவார்கள். அதே நேரம் சில பகுதிகளில் ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போட்டியின்றியும் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு வேளை பல்முனை போட்டி ஏற்பட்டு, அதிக வேட்பாளர் போட்டியிட்டால், ஓட்டுப்பெட்டிகள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், கூடுதல் பெட்டிகளை இருப்பு வைக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதற்காக, நெல்லை மாவட்டத்தில் இருந்து முதல் கட்டமாக 1,526 கோத்ரெஜ் வகை ஓட்டுப்பெட்டிகள் வந்தன.இதைத்தொடர்ந்து வேலூரில் இருந்து நேற்று 250 ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் திருப்பூருக்கு கொண்டு வரப்பட்டன. இவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டபின்னர், எந்த வார்டுக்கு எந்த வகை பெட்டியை பயன்படுத்துவது என்று கணக்கிட்டு சம்பந்தப்பட்ட வார்டுக்கு தேவையான ஓட்டுப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படும்.

0 comments: