Thursday, September 29, 2016

On Thursday, September 29, 2016 by Unknown in    

காங்கேயம்,காங்கேயம் பஸ் நிலையத்தில் மது அருந்திவிட்டு குடிபோதையில் படுத்து கிடக்கும் குடிமகன்களால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.குடிபோதையில் கிடப்பவர்களால் அவதி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பஸ் நிலையம் ஒரு முக்கிய சந்திப்பாக விளங்குகிறது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் 700–க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. அதுபோல் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இந்த பஸ்நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இங்கு வெளியூர் பஸ் நிலையம் மற்றும் டவுன் பஸ் நிலையம் என இரண்டு பஸ் நிலையங்கள் ஒரே வளாகத்தில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட இந்த பஸ் நிலைய வளாகத்தில் ஆங்காங்கே குடிமகன்கள் தினமும் குடித்துவிட்டு குடிபோதையில் படுத்து கிடப்பதை காணமுடிகிறது.இவ்வாறு குடிபோதையில் படுத்துக் கிடக்கும் குடிமகன்கள், நுழைவு வாயிலில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு உளறிக்கொண்டும், வாந்தி எடுத்தும், அந்த இடத்தை அசுத்தப்படுத்திக்கொண்டும் இருப்பதால் பயணிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர். அது மட்டுமின்றி படுத்து கிடப்பவர்களின் துணிகள் விலகி அருவருக்கத்தக்க வகையில் கிடப்பதால் பயணிகள் முகசுழிப்புடன் நிற்கவேண்டியுள்ளது.கோரிக்கை

இவ்வாறு அருவருக்கத்தக்க வகையில் குடிமகன்கள் பஸ்நிலையத்தில் படுத்து கிடப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. பஸ்நிலையம் அருகிலேயே டாஸ்மாக் கடைகள் இருப்பதால் குடிமகன்களுக்கு வசதியாக போய்விட்டது. குடித்து விட்டு பஸ்நிலையம் சென்று படுத்துக்கிடக்கிறார்கள்.எனவே போலீசார் அடிக்கடி பஸ்நிலையம் சென்று குடிபோதையில் இவ்வாறு படுத்து கிடக்கும் குடிமகன்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் பஸ்நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை மூடியாவது குடிமகன்களின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்று பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்

0 comments: