Thursday, September 29, 2016

On Thursday, September 29, 2016 by Unknown in    

அவினாசிஅவினாசி ஊராட்சி ஒன்றியத்தில் 200–க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தற்காலிகமாக பணியில் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு நாள் தோறும் ரூ.200 சம்பளம் என்று ஆண்டு முழுவதும் பணி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது 100 நாள் மட்டுமே வேலை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அவினாசி ஒன்றிய அலுவலகத்தில் சம்பளத்தொகை வழங்க கேட்டுள்ளனர். அதற்கு 27–ந் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும் என ஒன்றிய நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி சம்பளத்தொகை வழங்காததை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் ஒன்றிய அலுவலகத்தின் முன் நேற்றுமுன்தினம் சேவூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை தாலுகா அலுவலகம் அழைத்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில் சம்பளத்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறிய பின் கலைந்து சென்றனர்

0 comments: