Wednesday, September 21, 2016

On Wednesday, September 21, 2016 by Unknown in    

திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையின் சார்பில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது.இலவச பயிற்சி வகுப்பு

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் பயிற்றுவித்தல் பணிகள் தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கி பேசியதாவது:–மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., வி.ஏ.ஓ., பி.எஸ்.ஆர்.டி. ஆகிய அனைத்து தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வருகிற அக்டோபர் மாதம் 31–ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.இதில் வாரந்தோறும் மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 2–வது வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் தேர்வு பெறுபவர்களுக்கு பணிநியமன ஆணையை நான் வழங்குறேன்.உதவித்தொகை

ஒவ்வொரு மாதமும் 3–வது வெள்ளிக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி அல்லது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் அல்லது தொழில் நெறிக்கருத்துரை வழங்கப்பட்டு வருகிறது.வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டம் மூலம் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து இதுவரை அரசு பணி கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்து ஒருவருடம் முடிந்தவுடன் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு கல்லூரியில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது. இதை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும். இந்த பணிகளை அதிகாரிகள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கலெக்டர் எஸ்.ஜெயந்தி கூறினார்.கூட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி காளிமுத்து, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 comments: