Wednesday, September 28, 2016

On Wednesday, September 28, 2016 by Unknown in    

திருப்பூர்,புதுப்பட திருட்டு வி.சி.டி.க்களை தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த படங்களை திருட்டு வி.சி.டி.க்களாக பதிவு செய்தும் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல கோடி ரூபாய் முதலீட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை இதுபோன்று பதிவிறக்கம் செய்வது மற்றும் திருட்டு வி.சி.டி. பிரச்சினைகளால் இந்த தொழில் நசிந்து வருகிறது. திரையுலகின் முக்கிய பிரச்சினையான இதை பொது நலன் கருதி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்டத்திலும் ஆன்–லைன் மூலம் புதியபடங்களை பதிவிறக்கம் செய்வதை உரிய தொழில்நுட்பங்கள் உதவியை பயன்படுத்தி தடுப்பதோடு, திருட்டு வி.சி.டி.க்களாக விற்பனை செய்வதையும் தடுத்து அந்த செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது

0 comments: