Friday, September 30, 2016

On Friday, September 30, 2016 by Unknown in    

திருப்பூர், பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசும்போது, ‘ பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் வருவாய் கிராம அளவிலான பயிர் அறுவடை அடிப்படையில் இழப்பீடு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் பெறும் விவசாயிகள் கட்டாயம் இந்த திட்டத்தில் இணைக்கப்படுவர். கடன் பெறாதவர்கள், கரீப் பருவத்தில் காப்பீட்டுத்தொகையில் 2 சதவீதமும், ரபி பருவத்தில் 1.5 சதவீதமும் செலுத்தி பயிர்க்காப்பீடு செய்யலாம். வர்த்தக மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீட்டு தொகையில் 5 சதவீதம் செலுத்த வேண்டும். மீதமுள்ள காப்பீட்டு கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் செலுத்தும். இழப்பீட்டு தொகை முழுவதும் காப்பீட்டு நிறுவனமே வழங்கும்.இந்த காப்பீட்டுத்திட்டத்தில் பருவம் தொடங்கும் முன் மழை பொய்த்தாலும், விதைப்புக்கு பிறகு மழை பொய்த்து போனாலும், காப்பீடு தொகையில் 25 சதவீதம் வரை இழப்பீடு பெறலாம். அறுவடைக்கு பின், தானியங்களை உலர வைக்க வேண்டிய பயிர்கள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டாலும் இழப்பீடு கிடைக்கும்’ என்றார்.கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குமார், வேளாண்மை இணை இயக்குனர் ரங்கநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அல்டாப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

0 comments: