Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

திருப்பூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் நேற்று அந்தந்த ஊராட்சி அமைப்புகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மாவட்டத்தில் 2,689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல்

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி வார்டுகளில் அமைக்கப்பட இருக்கும் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் நேற்று பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையிட்டு வாக்குச்சாவடிகளின் பட்டியல்கள் குறித்து கருத்துக்களை வருகிற 12–ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம் என்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி அறிவித்தார்.2,689 வாக்குச்சாவடிகள்

அதன்படி நேற்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் 1,636 வாக்குச்சாவடிகளும், 16 பேரூராட்சிகளில் 271 வாக்குச்சாவடிகளும், 5 நகராட்சிகளில் 227 வாக்குச்சாவடிகளும், திருப்பூர் மாநகராட்சியில் 555 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 2,689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 10 லட்சத்து 54 ஆயிரத்து 280 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 51 ஆயிரத்து 759 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 209 பேர் என மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 248 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியல் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை பார்வையிட்டனர்.திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக நேற்று வைக்கப்பட்டது. 60 வார்டுகளில் 3 லட்சத்து 21 ஆயிரத்து 33 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து ஆயிரத்து 688 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 118 என மொத்தம் 6 லட்சத்து 22 ஆயிரத்து 839 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 178 ஆண் வாக்குச்சாவடிகள், 178 பெண் வாக்குச்சாவடிகள், 199 பொது வாக்குச்சாவடிகள் என 555 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை 158 இடங்களில் இடம்பெற்றுள்ளன.கடந்த உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் 425 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 130 வாக்குச்சாவடிகள் அதிகரித்துள்ளன.திருப்பூர் ஊராட்சி ஒன்றியம்

இதுபோல் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளில் 101 வாக்குச்சாவடிகள் 90 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் ஒன்றியத்தில் 35 ஆயிரத்து 692 பெண் வாக்காளர்கள், 36 ஆயிரத்து 168 ஆண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 4 பேர் என மொத்தம் 71 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த உள்ளாட்சி தேர்தலில் 89 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை ஆண், பெண் வாக்குச்சாவடிகளாக பிரிக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்தலில் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன

0 comments: