Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    

திருப்பூர்திருப்பூர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையில், கலெக்டர் தலைமையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பாதிப்புக்குள்ளாக கூடிய, ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் நிதி ஆதரவுத்தொகை வழங்கப்படுகிறது. அனைத்து வட்டாரங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் இல்ல ஆய்வு மற்றும் கள ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தற்போதைய கல்வி மற்றும் பொருளாதார நிலை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு நிதி ஆதரவு மற்றும் தற்காலிக பராமரிப்பு வழங்கும் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.2014–15–ம் ஆண்டு 40 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் 2015–16–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 36 குழந்தைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 7 மாதங்களுக்கு ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் என மொத்தம் ரூ.14 லட்சத்து 64 ஆயிரம் நிதி ஆதரவுத்தொகைக்கான காசோலையை மாணவ–மாணவிகளுக்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி வசந்தகுமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் பிரேமலதா, தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் ஜோதிலட்சுமி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கலந்துகொண்டனர்

0 comments: