Friday, September 30, 2016

On Friday, September 30, 2016 by Unknown in    

ஊத்துக்குளி,பனியன் கழிவுகளில் இருந்து பஞ்சு தயாரிக்கும் தொழில் செய்ய வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் வாலிபர் தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்துகொண்டார்.இந்த பரிதாப சம்பவம் பற்றி கூறப்படுதாவது:–வங்கியில் கடன்

திருப்பூர் பூலுவப்பட்டி தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துராமன் மகன் ராம்கணேஷ் (வயது27). இவர் ஊத்துக்குளி அருகே உள்ள பள்ளகவுண்டம்பாளையத்தில் பனியன் கழிவுகளில் இருந்து பஞ்சு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் 9 பேர் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.ராம்கணேஷ் திருப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.28 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இன்னும் ரூ.7 லட்சம் கடன் கட்ட வேண்டி இருந்தது. கடந்த 4 மாதங்களாக வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை ராம்கணேஷ் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நேற்றுமுன்தினம் வங்கியில் இருந்து அதிகாரிகள் வந்து ஏன் கடன் தவணையை கட்டவில்லை என்று ராம்கணேசிடம் விசாரித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை

இதனால் மனம் உடைந்த காணப்பட்ட ராம்கணேஷ் நேற்று பள்ளகவுண்டம்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் தனது காலில் மின்சார வயர்களை சுற்றிக்கொண்டு மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ராம்கணேசின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

0 comments: