Thursday, September 01, 2016

On Thursday, September 01, 2016 by Unknown in    


சேவூர் அருகே வியாபாரியிடம் வழிப்பறி செய்து, காவலரைத் தாக்கிக் கடித்துவிட்டு, தப்பியோட முயன்றவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அவிநாசி, கைகாட்டிப்புதூரைச் சேர்ந்தவர் முத்துசாமி (43). இவர் சணல் பை வியாபாரி. இவர், சேவூர் அருகே போத்தம்பாளையத்தில் புதன்கிழமை சணல் பை வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாகச் சென்ற மர்ம நபர், முத்துசாமியிடம் முகவரி விசாரிப்பதுபோல் நடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 500, செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது, முத்துசாமி சப்தம் போட்டுள்ளார். அவரது சப்தம் கேட்டு, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சத்தியமூர்த்தி, அந்த வழிப்பறித் திருடனை பிடிக்க முயன்றுள்ளார். அந்த திருடன், சத்தியமூர்த்தியைத் தாக்கிக் கடித்துவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தும் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீஸார், அந்தத் திருடனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த நபர், சேவூர் அருகே புதுச்சந்தைப் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (எ) புங்கான் என்பதும், இவர் ஏற்கெனவே 4 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் புங்கானை கைது செய்துள்ளனர்.

0 comments: