Saturday, September 10, 2016

On Saturday, September 10, 2016 by Unknown in    

#கர்நாடகத்தார்_தமிழகத்திலிருந்து_மணல்_கொள்ளை

கடந்த இரண்டு நாட்களாக சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் தினந்தோறும் செல்லும் 100-200 மணல் கொள்ளையடிக்கும் லாரிகளைப் பார்க்க முடியவில்லை என்னும் பதிவை ஒரு நண்பர்  செய்திருந்தார்.

கர்நாடகத்தில் அணைகள் கட்ட தமிழகத்திலிருந்தே மணல் கடத்தப்படுகிறது என்று, 18/03/2016 அன்று பெங்களூரு மாவட்ட ஆட்சியர் சுமார் 700 மணல் கடத்திய லாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அத்தனை வழக்குகளும் சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தியவை என்பதும், தொடர்ந்து தினமும் 100 முதல் 200 லாரிகள் வரை ஆற்று மணல் கொள்ளையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுவது வாடிக்கையாகி விட்டது. 

காவிரி நதி நீரை உரிமையோடு கேட்கும் நாம் அந்த நீரை பாதுகாக்கும் மணலை கொள்ளையடிக்காமல் காப்பதும் நமது கடமை என்று உணருவோமா?

0 comments: