Tuesday, September 06, 2016

On Tuesday, September 06, 2016 by Unknown in    

நைஜீரிய இஸ்லாமிய இளைஞருக்கும் காரைக்கால் பெண்ணுக்கும் இந்து முறைப்படி காரைக்காலில் திருமணம் நடைபெற்றது.
காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர், காரைக்கால் பாரத ஸ்டேட் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவரது மகள் சத்தியபிரியா என்கிற சனாவுக்கும், நைஜீரியாவைச் சேர்ந்த அகமது பெல்லோ பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.பால்பிண்டார் இஸôக் மகன் இப்ராஹிம் இஸôக்குக்கும் காரைக்காலில் உள்ள திருமண அரங்கு ஒன்றில் இந்து முறைப்படி திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.
இதில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இத்திருமணம் குறித்து மணமகள் குடும்பத்தினர் கூறும்போது, சத்தியபிரியா புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தபோது, நைஜீரியாவைச் சேர்ந்த இப்ராஹிம் இஸôக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களுக்கு இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் காரைக்காலில் திருமணம் நடைபெற்றது. மணமகள், காரைக்காலில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். மணமகன் நைஜீரியாவில் தொழில் செய்துவருகிறார் என்றனர்.

0 comments: