Thursday, January 26, 2017

On Thursday, January 26, 2017 by Tamilnewstv in    
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான ,காவல்துறையினரின் வன்முறை தாக்குதல் வெறியாட்டத்தை கண்டித்து மதுரை , கோவை , சென்னை ஆகிய இடங்களில் மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் வரும் 28ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் 
.இதே போல தமிழகத்தில் நடந்து வரும் சாதிய வன்கொடுமையை கண்டித்தும் , அதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வலியுருத்தியும் பிப் 2 ந் தேதி மாநில தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.

தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசி விளம்பரம் தேடி வரும் சுப்பிரமணிய சாமியின் செயல் கண்டிக்கத்தக்கது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு , அதன் கட்டுப்பாட்டில் உள்ள விலங்குகள் நல வாரியம் வாய்லாக ,தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்திருக்கிறது .இது மத்திய அரசின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது.

வர்தா புயல் சேதத்தை பார்வையிடவும் ,வறட்சி சேதத்தை  பார்வையிடவும் மத்திய அரசு காலதாமதமாக தனது குழுவை அனுப்பியுள்ளது .

வர்தா புயல் சேதத்திற்கான நிவாரண தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சுதந்திரமாக செயல்படுகிறார் .அவர் சுதந்திரம் பெற்றுள்ளார் .

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த விரைந்த , தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர் மற்றும் இளைஞர்கள் நடத்திய போரட்டத்தில் அரசியல் சார்புடையவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது உண்மை தான் .அதற்காக அவர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை அரசு கட்டவிழ்த்து விட்டது கண்டிக்கத்தக்கது. 

   _திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா பேட்டி

0 comments: