Saturday, July 22, 2017

On Saturday, July 22, 2017 by Tamilnewstv   
திருச்சி           22.7.17

சூரிய நமஸ்கார பயிற்சியில் திருச்சி மாணவி உலக சாதனை. ருத்ர சாந்தி யோகாலயம் சார்பில் 2.3 அடி ஆழ நீச்சல் குளத்தில் 120 சூரிய நமஸ்காரம் யோகப் பயிற்சினை 40நிமிடங்களில் 1440 நிலைகளை செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மென்ட் அருகே  நடைபெற்றது.

திருச்சி ராஜாஜி வித்யாலயா பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ராஷ்மி நீச்சல் குளத்தில் 120 சூரிய நமஸ்கார யோகப் பயிற்சினை செய்து உலக சாதனை செய்தார். இச்சாதனையை பதஞ்சலி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது.

ருத்ர சாந்தி யோகாலய நிறுவனர் யோகரத்னா கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பதஞ்சலி புக் ஆப் வேல்டு ரெக்கார்டு முதன்மை நடுவராக முனைவர் அசோகன் மதிப்பீடு செய்தார். பாரதிய ஜனதா கட்சி மாநில செயலர் பொன் பாலகணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விஐபி ஏஜென்சி நிர்வாக இயக்குநர் மனோகரன் , ஸ்ரீ காவேரி கலை பண்பாட்டு மைய தலைவர் ஜெயநந்தினி , அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

0 comments: