Saturday, November 18, 2017

On Saturday, November 18, 2017 by Tamilnewstv in    
பழங்காலப் பொருட்கள் கண்காட்சி.
ஸ்ரீ  சிவானந்தா பாலாலயா பள்ளி சார்பில் நவம்பர் 18, 19  தேதிகளில் பழங்காலப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி திருச்சி,   ராமலிங்கநகர் தெற்கு விஸ்தரிப்பு, இரண்டாவது குறுக்குத்தெருவில் உள்ள  ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளி வளாகத்தில் துவங்கியது. கண்காட்சியில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை இளைய சமுதாயத்தினர் கண்டுணரும் வகையில் அம்மி, ஆட்டுக்கல், கல்சட்டி,   ஆயுதங்கள், உரல் , திருக்கை, படிகள், எடைக் கற்கள், அஞ்சறைப் பெட்டி , சிலம்பு , விளையாட்டு பொருட்கள், பித்தளை கலைப் பொருட்கள் உட்பட பல்வேறு அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி முன்னாள் மேஜர் ஜென்ரல் பாபு, முதல்வர்கள் பானுமதி, சரஸ்வதி, துணை முதல்வர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.  கண்காட்சியினை மூன் டி.வி. நிர்வாக இயக்குநர் ஷானவாஸ்கான் கண்காட்சியினை திறந்து வைத்தார்.

0 comments: