Wednesday, November 08, 2017

On Wednesday, November 08, 2017 by Tamilnewstv   
திருச்சி
பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
அடித்துக்கொலை என மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சி வடக்கு காட்டூரை சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டியன். தொழிலாளியான இவருக்கு வசந்தி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 
ஆறுமுகப்பாண்டி கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிய பாலக்கரையை சேர்ந்த ஆரிப் என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆர்pப் மாரடைப்பில் இறந்துவிடவே ஆரிபின் மனைவி ரம்ஜானிடம் பணத்தை திருப்பி தருமாறு  பலமுறை கேட்டு வந்துள்ளார். இந்த சு10ழ்நிலையில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு ரம்ஜான் கூறவே பணத்தை  வாங்குவதற்காக நேற்று  காலை ரம்ஜான் வீட்டிற்கு வந்த ஆறுமகப்பாண்டிக்கும் ரம்ஜானுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகப்பாண்டி ரம்ஜானின் கைää கால்களில் கத்தியால் குத்தியதால் ரம்ஜான் மயங்கி விழுந்தார். ரம்ஜான் இறந்துவிட்டதாக கருதிய ஆறுமுகப்பாண்டி போலீஸ் விசாரணைக்கு பயந்து அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பாலக்கரை போலீசார் இறந்த உடலைமீட்டு உடற்கூறு சோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்நிலையில் இன்று காலை திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு  தனது இரு மகள்கள் மற்றும் உறவினர்களுடன் வந்த ஆறுமுகப்பாண்டியன் மனைவி வசந்தி தனது கணவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரை அடித்து கொலை செய்து விட்டனர் எனவே காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது  இதனையடுத்து அங்கு வந்த பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தைநடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். 
பேட்டி வசந்தி இறந்த ஆறுமுக பாண்டியன் மனைவி

0 comments: