Monday, December 11, 2017

On Monday, December 11, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி 11.12.2017

செயின் பறிப்பு கொள்ளையர்கள் இருவர் கைது
நகைகள் மற்றும் இரு சக்கர வாகனம் மீட்பு

திருச்சி மாநகரத்தில்; தனியாக செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர்.யு.அமல்ராஜ்; உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.


மேற்படி செயின் பறிப்பு தொடர்பாக 09.12.2017-ம் தேதி காலை பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாய்பாபா கோவில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக TN-55-S-9514  என்ற இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர்களை இரகசிய தகவலின்பேரில் நிறுத்தி விசாரிக்க அவர்கள் திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த பிரின்ஸ் (27/17)த/பெ.மார்ட்டின் மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த ராஜதுரை (55/17)த/பெ.கோபால் எனவும் அதில் பிரின்ஸ் என்பவர் திருச்சி மாநகரம் காந்திசந்தை காவல்நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும்  அவருக்கு கண்டோன்மெண்ட் திருவெறும்பூர் அமர்வு நீதிமன்றம்பெரம்பலூர்பாடாலூர் ஆகிய காவல்நிலையங்களில் கொலை வழக்கு மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளதாகவும் தெரிய வந்தது.
மேற்படி நபர்களை விசாரிக்க கடந்த 04.08.2017-ம் தேதி 1) செந்தண்ணீர்புரம் பாலம் அருகில்பைபாஸ் ரோடு 2) கே.கே.நகர் பகுதி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் மற்றும் கடந்த 02.12.2017-ம் தேதி 3) ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஜெயம் மளிகை கடை, குளாப்பட்டி ரோடு ஆகிய இடங்களில் தனியாக சென்ற பெண்களிடம் கழுத்திலிருந்து செயின்களை பறித்து சென்றதாக கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் அவர்களின் வசமிருந்து ரூ. 200000மதிப்புள்ள 10¼ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் அவர்கள் செயின் பறிப்பிற்கு பயன்படுத்திய வTN-55-S-9514 என்ற இரு சக்கர வாகனத்தையும் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகளை 09.12.2017-ம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
மேற்படி தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் சம்மந்தப்பட்ட எதிரிகளை கைது செய்தும்அவரிடமிருந்து மேற்படி திருட்டு சொத்துக்களை கைப்பற்றிய தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார். 

0 comments: