Tuesday, December 26, 2017

On Tuesday, December 26, 2017 by Tamilnewstv in ,    
திருச்சி மாநகர காவல் ஆணையர்அறிவிப்பு

திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி
பரமபதவாசல் திறப்பு திருவிழா 28.12.2017 இரவு 1200 மணிமுதல் 29.12.2017 இரவு வரை

திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது இந்த வருடம் 19.12.2017-ம் தேதி முதல் 28.12.2017-ம் தேதி வரை பகல்பத்து திருவிழாவாகவும் 29.12.2017-ம் தேதி முதல் 08.01.2018-ம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது. 29.12.2017-ம் தேதி அதிகாலை 05.00 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படவுள்ளது. இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் திருவரங்கம் வரவுள்ளார்கள். பரமபதவாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு கீழ்க்கண்ட வழிகளில் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்டுகிறது.
பரமபத வாசல் திறப்பிற்கு முன்பு

29.12.2017-ம் தேதி அதிகாலை பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு பக்தர்கள் இரவு
12-மணிக்கு மேல் ரெங்கா ரெங்கா கோபுரம் வாயிலில் மேற்கு புறமாக அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக முன்னுரிமை அடிப்படையில் கட்டணமில்லா தரிசனத்திற்கு செல்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு அனுமதிக்கப்படும் பக்தர்கள் பவித்திர மண்டபம் வாகன மேடை துரைப்பிரகாரம் உள்கொடை மண்டபம் பிரசன்ன முன்மண்டபம் ஆகிய இடங்களில் சென்று அமர வேண்டும்.
ரெங்கா ரெங்கா கோபுரத்தின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக சந்தன மண்டபம் செல்ல ரூ.3000ஃ-க்கான நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் பத்திரிகையாளர்கள் சிறப்பு பணியாளர்கள் அர்ச்சகர்கள் திருக்கோவில் பணியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
ரெங்கா ரெங்கா கோபுரத்தின் கிழக்குப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக கருவூலமேடை செல்ல அனுமதிச் சீட்டு பெற்றுள்ள  உபயதாரர்கள் மற்றும் கிளிமண்டபம் செல்ல ரூ.500ஃ-க்கான கட்டண நுழைவுச்சீட்டு உள்ளவர்கள் மற்றும் சிங்கிள் ஸ்பிரில் பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
ரெங்கா ரெங்கா கோபுரம் வழியாக அமைக்கப்பட்டுள்ள மூன்று வழிகளிலும் 29.12.2017-ம் தேதி இரவு 1200 மணிமுதல் அதிகாலை 0200 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கிழக்குவாசல் வழியாகவோ (வெள்ளைக் கோபுரம்) வடக்கு வாசல் வழியாகவோ பரமபதவாசல் திறப்பிற்கு முன்பு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.

-2-

பரமபத வாசல் திறப்பிற்கு பின்பு

பரமபதவாசல் திறப்பிற்கு பின்பு ரெங்கா ரெங்கா கோபுரம் மேற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக  சொர்க்கவாசல் மட்டும் செல்பவர்கள்; கார்த்திகை கோபுரம் ஆர்யபடாள்; கோபுரம் பவித்ர மண்டபம் துரைப்பிரகாரம் வழியாக பரமபத வாசல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
ரெங்கா ரெங்கா கோபுரம் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக மூலவர் முத்தங்கி சேவைக்கு கட்டணமில்லா தரிசனத்திற்கு செல்பவர்கள் கார்த்திகை கோபுரம் பிரசாத ஸ்டால் பின்புறமுள்ள ஸ்ரீ ஜெயந்தி மண்டபம் ஆரியபடாள் கோபுரம் நாழிகேட்டான் கோபுரம் வழியாக வரிசையாக அனுப்பப்படுவார்கள். மூலவர் முத்தங்கி சேவை முடிந்து தொண்டைமான் கேட் வழியாக வெளிப்புறம் சென்று பரமபதவாசலை அடைய வேண்டும்.
ரெங்கா ரெங்கா கோபுரம் நடுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக கோவில் பணியாளர்கள் சிறப்பு பணியாளர்கள் அர்ச்சகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
பரமபதவாசல் திறப்பிற்கு பின்பு கிழக்கு வாசலில் (வெள்ளைக் கோபுரம்) தென்புறமாக அமைக்கப்பட்டுள்ள வரிசை தடுப்புகள் வழியாக ரூ.250ஃ- கட்டண தரிசனத்தில் மூலவர் முத்தங்கி சேவைக்கு செல்பவர்கள் வெளிமணல் வெளிஉள்மணல் வெளிஆரியபடாள்; நுழைவுவாயில்பிரசாத ஸ்டால் பின்புறமுள்ள ஸ்ரீ ஜெயந்தி மண்டபம் ஊஞ்சல் மண்டபம் மடப்பள்ளி நாழிகேட்டான் நுழைவுவாயில் வழியாக மூலவர் முத்தங்கி சேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இவர்கள் மூலவர் முத்தங்கி சேவை முடிந்த பின்னர்  தொண்டைமான் கேட் வழியாக பரமபதவாசல் செல்லவேண்டும்.
பரமபதவாசல் மற்றும் மூலவர் முத்தங்கி சேவை முடிந்து அனைத்து பக்தர்களும் வெள்ளைக் கோபுரம் வழியாக வெளியே செல்லவேண்டும்.
பரமபதவாசல்  திறப்பிற்கு பின்பு 29.12.2017-ம் தேதி காலை 06.00 மணிக்கு மேல் வடக்கு வாசல் வழியாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் வெள்ளை கோபுரம் வழியாக சேவார்த்திகள் மட்டும் ஆயிரங்கால் மண்டபத்திற்கு நம்பெருமாள் உற்சவர் தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு தரிசனம் முடிந்தபின்பு வெள்ளை கோபுரம் (கிழக்கு வாசல்) வழியாக வெளியே செல்ல வேண்டும். 
பரமபதவாசல் திறப்பு திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குபவர்கள் காவல்துறை மற்றும் உணவு தரக்கட்டுப்பாட்டுத்துறை  அலுவலரிடம் முன் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும்.


திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவினை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் 
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 29.12.2017 அன்று நடைபெறுவதை முன்னிட்டு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது.

பேருந்து போக்குவரத்து மாற்றம் : (28.12.2017-ம் தேதி இரவு 08.00 மணி முதல்  29.12.2017- ம் தேதி மதியம் 02.00 மணி வரை)

மத்திய பேருந்து நிலையம்ää சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பேருந்து வழித்தடங்கள்
அண்ணாசிலை - ஓடத்துறை பாலம் - தேசிய நெடுஞ்சாலை - லு ரோடு சந்திப்பு - சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு - நெல்சன் ரோடு - சிங்க பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் - நெல்சன் ரோடு - காந்திரோடு - ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை -  அண்ணாசிலை - சத்திரம் பேருந்து நிலையம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடிää மணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகர பேருந்து வழித்தடங்கள்.

அண்ணாசிலை - ஓடத்துறை பாலம் - தேசிய நெடுஞ்சாலை - லு ரோடு சந்திப்பு - சோதனை சாவடி எண்.6 - கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது கொள்ளிடம் பாலம்  - பஞ்சக்கரை ரோடு - நெல்சன் ரோடு - சிங்க பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தம் - நெல்சன் ரோடு - காந்திரோடு - ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை -  அண்ணாசிலை - சத்திரம் பேருந்து நிலையம்.

பெரம்பலூர்ää அரியலூர்ää துறையூர் மற்றும் கடலூர் மார்க்கம் சென்று வரும் புறநகர பேருந்துகள் வழக்கமான பாதை வழியாகவே சென்று வர வேண்டும்.

பக்தர்களின் வாகனங்கள் வந்து செல்ல வேண்டிய வழித்தடங்கள்

முக்கிய நபர்களின் வாகனங்கள்:
அண்ணாசிலை - மாம்பழச்சாலை - அம்மாமண்டபம் ரோடு - ராகவேந்திரா ஆர்ச் -  பீட்-42 - திருவள்ளுவர் தெரு - மேற்கு சித்திரை வீதி வந்து வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.


வாகன அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் :
ஓடத்துறை பாலம் - தேசிய நெடுஞ்சாலை - லு ரோடு சந்திப்பு - சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு - வடக்கு மொட்டை கோபுரம் - வடக்கு சித்திரை வீதி வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு - ராகவேந்திரா ஆர்ச் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை - காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.

வாகன அனுமதிச்சீட்டு இல்லாத வாகனங்கள்:


கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலா பேருந்துகள்
காவல் சோதனைச்சாவடி எண்.7 - அன்பிலார்சிலை சந்திப்பு - அண்ணாசிலை வழியாக தேசிய மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் பேருந்துகளை எடுத்து செல்ல வேண்டும்.

கரூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்குவரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்
காவல் சோதனைச்சாவடி எண்.7 - அன்பிலார்சிலை சந்திப்பு - அண்ணாசிலை - ஓடத்துறை பாலம் - தேசிய நெடுஞ்சாலை - ‘லு” ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு - தசாவதார சன்னதி - மேலூர் ரோடு - மூலத்தோப்பு மற்றும் முத்துநகர் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மூலத்தோப்பு - ராகவேந்திரா ஆர்ச் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை - காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.

மதுரைää புதுக்கோட்டைää தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலாபேருந்துகள்
பால்பண்ணை - சஞ்சீவிநகர் சந்திப்பு - ‘லு” ரோடு சந்திப்பு - காவல் சோதனை சாவடி எண்.6 - பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.

மதுரைää புதுக்கோட்டைää தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்

பால்பண்ணை - சஞ்சீவிநகர் சந்திப்பு - ‘லு” ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு - தசாவதார சன்னதி - மேலூர் ரோடு வழியாக மூலத்தோப்பு மற்றும் முத்துநகர் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் மூலத்தோப்பு - ராகவேந்திரா ஆர்ச் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை - காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.


சென்னைää அரியலூர்ää சேலம்ää மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுற்றுலா பேருந்துகள்:

‘லு” ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும்.



சென்னைää சேலம்ää அரியலூர் மார்க்கத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கார் மற்றும் வேன்கள்

‘லு” ரோடு சந்திப்பு - பஞ்சக்கரை ரோடு - தசாவதார சன்னதி - மேலூர் ரோடு - மூலத்தோப்பு வாகனம் நிறுத்துமிடத்தில்  நிறுத்திவிட்டு செல்லவேண்டும். பின்னர் மூலத்தோப்பு - ராகவேந்திரா ஆர்ச் - அம்மாமண்டபம் - மாம்பழச்சாலை - காவேரி பாலம் வழியாக செல்ல வேண்டும்.


வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு ஆட்டோவில் வருகை தரும் வயதானவர்கள் ஃ மாற்றுத்திறனாளிகள்

திருவானைக்காவல் சந்திப்பு - காந்தி ரோடு - தேவி தியேட்டர் சந்திப்பு - வடக்கு தேவி ரோடு - கீழசித்திரவீதி வந்து அவர்களை இறக்கிவிட்டு பின்னர் வடக்கு தேவி ரோடு - தெற்கு தேவி ரோடு - வீரேஸ்வரம் - அம்மாமண்டபம் ரோடு - மாம்பழச்சாலை வழியாக செல்ல வேண்டும். 

உத்திரை வீதியில் குடியிருப்பவர் வாகனங்கள் :

உத்திரை வீதியில் குடியிருப்பவர்கள் 28.12.2017ம் தேதி முதல் 29.12.2017ம் தேதி வரை தங்களது வாகனங்களை வடக்கு சித்திரைவீதியில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.



கனரக சரக்கு வாகன போக்குவரத்து மாற்றம் : ( 28.12.2017 ம் தேதி மதியம் 02.00 மணி முதல் 30.12.2017 ம் தேதி காலை 06.00 மணி வரை )
 
கனரகää சரக்கு வாகனங்கள்

கரூர் மார்க்கத்திலிருந்து திருச்சி தஞ்சை புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் கனரகää சரக்கு வாகனங்கள் குளித்தலை - முசிறி - ழே.1 டோல்கேட் - சென்னை புறவழிச்சாலை வந்தடைந்து தொடர்ந்து தஞ்சை புதுக்கோட்டை மார்க்கத்தில் செல்ல வேண்டும்.

புதுக்கோட்டை தஞ்சாவூர் மார்க்கத்திலிருந்து கரூர் மார்க்கமாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மாநகர பகுதிக்குள் வராமல் “லு” ரோடு சந்திப்பு - ழே.1 டோல்கேட் - முசிறி வழியாக செல்லவேண்டும்.

0 comments: