Wednesday, March 07, 2018

On Wednesday, March 07, 2018 by Tamilnewstv   
திருவெறும்பூரை அடுத்துள்ள பெல் கணேஷா பஸ் ஸ்டாப் அருகே ஹெல்மெட் கேஸ்போடும் போலீஸாரின் அத்துமீறலால் புதுமணப்பென் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி தஞ்சை சாலை மார்க்கத்தில் போக்குவரத்து 2 மணி நேரத்திற்கும் மேலாக துண்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முழுவதும் போலீஸார் வாகனச் சோதனை என்கிற பெயரில் பொதுமக்களுக்குத் அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி திருவெறும்பூரை அடுத்த பெல் கணேஷா பஸ் ஸ்டாப் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிகளை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் கையைக் காட்டி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஹெல்மெட் போடாமல் சென்ற தம்பதியினர் நிற்காமல் சென்றதால் போலீஸார், அவர்களை மற்றொரு பைக்கில் விரட்டிச்சென்று மறித்தனர். அப்போது குடிபோதையில் இருந்த காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் பைக்கில் இருந்த தம்பதியினரை எட்டி உதைத்துள்ளார்.
இதனால் பைக்கை ஓட்டி வந்த ராஜா நிலை தடுமாற பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி உஷா சாலையில் கீழே விழுந்துள்ளார்.
அதேநேரம் அந்தப்பகுதியை கடந்த வேன் ஒன்று பைக் ஓட்டி வந்த ராஜா என்கிற தர்மராஜ் மனைவி உஷாவின் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 மாத கர்ப்பிணியான உஷா துடிதுடித்து கணவன் கண் முன்னேயே பலியானார். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியில் திரண்டனர். பின், போலீஸ்மீது பொதுமக்கள் கல்வீசித் தாக்க, சக போலீஸார் அவரை அலக்காக தூக்கி திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகேயுள்ள காவிரி அதி நவீன மருத்துவமனையில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்த விபத்தையும் போலீஸாரின் நடவடிக்கைகளையும் பார்த்த பொதுமக்கள் ஆவேசமடைந்த தங்களது மொபைல் போன் மூலம் சமூக ஊடகங்களுக்கும், ஊடகங்களுக்கும் தகவல் கொடுக்க அப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருச்சி தஞ்சை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
இதனிடையே உஷாவின் இறப்புக்கு காரணமான போக்குவரத்து ஆய்வாளர் காமராஜை கைது செய்துள்ளதாக எஸ்.பி. கல்யாண் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஹெல்மெட் கேஸ் போட்டு வசூலைப்பார்க்கும் போலீஸ் மனித உயிர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றாலும் சரி இப்படி கேவலமா நடந்துக்கறது வன்மையாக கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் போலீஸாரை அர்ச்சனை செய்யத்துவங்கி விட்டனர்.


0 comments: