Tuesday, March 13, 2018

On Tuesday, March 13, 2018 by Tamilnewstv   
வரலாற்று சிறப்புமிகு பிஷப் ஹீபர் கல்லூரியின் நடப்பு

கல்வியாண்டிற்கான (2017-2018) சாதனையாளர் தின விழா 13.03.2018
செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் கல்லூரி திறந்த வெளி
கலையரங்கத்தில் அமைக்கப்பெற்ற சிறப்பு பந்தலில் இனிதே நடைபெற்றது.
ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் உயர்மதிப்பெண்
பெற்ற 235 மாணவர்கள் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர்
முனைவர் த. பால் தயாபரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற
இவ்விழாவிற்கு நிதித்துறை மேனாள் கணக்கியல் இணைப்பொது
நெறியாளரும் லக்க்ஷ்மி குமரன் & ஸ்ரீதரன் குழும (புது தில்லி) தலைமை
வணிகப் பங்காளருமாகிய திரு எஸ். சீதாராமன் அவர்கள் சிறப்பு
விருந்தினராகக் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றி பரிசுகளை
வழங்கினார்கள். மதிப்புறு விருந்தினராக திருச்சி அகமது பிரதர்ஸ் ஜவுளி
நிறுவனத்தின் மேலாண்மை பங்குதாரர் திரு.எச். முகமது சித்திக் அவர்கள்
கலந்துகொண்டு சாதனையாளர்களை வாழ்த்தினார்கள். சமூகசேவை நோக்கில்
சமூகப் பணியாற்றிய எட்டு வகுப்பு மாணாக்கர்களுக்கு Heber Philanthrophy
விருதுகள் வழங்கப்பட்டன. கல்லூரிப் பேராசிரியர் தகுதித் தேர்வில் வென்ற
30க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கும், 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும்
பரிசளித்து சிறப்பு செய்யப்பட்டது.
கல்லூரியில் கருத்தரங்குகள் நிகழ்த்திதந்த கருத்தரங்க
ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்றிய சுமார் இருபது பேராசிரியர்களுக்கு
சிறப்பு செய்யப்பட்டது.
முன்னதாக இவ்விழாவினை கல்லூரி சமய நெறியாளர் அருள்திரு
பி.செல்வராஜ் அவர்கள் இறைவேண்டல் செய்து தொடங்கி வைத்தார். கல்லூரி
பாடகர் குழுவினர் இறைவாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து, கல்லூரி பாடல்
ஆகியவற்றை பாடினர். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

0 comments: