Thursday, April 30, 2015

On Thursday, April 30, 2015 by Unknown in ,    



மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
உழைப்பாளிகளின் தினமான மே தினத்தை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய தலைவர் பெரியார். மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. மே தினத்தை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்து
சிறப்புச் சேர்த்தார் திமுக தலைவர் கருணாநிதி.
மே தினத்தை திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட மாநகரம், நகர, ஒன்றியப்பகுதி, பேரூராட்சி மற்றும் வட்டக் கிளைகள் முழுவதும் கட்சிக் கொடி, தொழிற்சங்க கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் திமுகவினர் சிறப்பாக கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மே தினத்தை முன்னிட்டு மே முதல் தேதி காலை 8 மணிக்கு மங்கலம் நான்கு சாலை சந்திப்பில் ஆட்டோ சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா, 9 மணியளவில் பனியன் சங்கம் சார்பில் பூண்டி சுற்றுச் சாலை டெக்ஸ் போர்ட் அருகில் கொடியேற்று விழா, 10 மணியளவில் அமைப்பு சாரா நல வாரியம் சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் குழந்தைகளுக்குப் புத்தகம் வழங்குதல், மாலை 6 மணியளவில் திருப்பூர் 44-ஆவது வட்டம் வெங்கடேஸ்வரா நகரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

0 comments: