Thursday, April 30, 2015

On Thursday, April 30, 2015 by Unknown in ,    
உடுமலை, தளி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக அச்சாலையை அகலப்படுத்தும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாள்களாக நகரின் முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. இதன் ஒருபகுதியாக உடுமலை நகரில், தளி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கமிஷனர் சுப்பையா வீதியில் இருந்து மேம்பாலத்துக்கு செல்லும் இரு வழிப்பாதையை மூன்று வழிப்பாதையாக மாற்றும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியது:
 தளி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தளி மேம்பாலத்தில் இருந்து கமிஷனர் சுப்பையா வீதி வழியாக உடுமலை நகருக்குள் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கமிஷனர் சுப்பையா வீதியில் உள்ள 30 அடி சாலை, 60 அடி சாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்காக மேம்பாலத்தின் முகப்பில் இருந்த ரூ. 80 லட்சம் மதிப்புள்ள 8 சென்ட் இடம் தனியாரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்டுள்ளது என்றனர்.

0 comments: