Thursday, April 30, 2015

On Thursday, April 30, 2015 by Unknown in ,    


தாராபுரம் நகர்மன்றக் கூட்டத்தில், 28-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் வெ.கமலக்கண்ணனை பதவி இழப்பு செய்து புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  தாராபுரம் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் ஞா.கலாவதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ், ஆணையர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இதில், நகர்மன்றத் தலைவர் பேசியது:
 நகராட்சியின் 28-ஆவது வார்டு கவுன்சிலராகப் பதவி வகித்து வரும் திமுக உறுப்பினர் வெ.கமலக்கண்ணன் மன்ற விதிமுறைகளுக்கு மாறாக, நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை தனது பெயரில் ஏலம் எடுத்துள்ளார்.
 இது குறித்து நகராட்சி வழக்குரைஞரிடம் சட்டப்படியான கருத்துரு கேட்கப்பட்டதில், கமலக்கண்ணன் நகராட்சி விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்ட காரணத்தால், அவரை பதவி இழப்பு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது குறித்து கவுன்சிலர்கள் முடிவு செய்யலாம்.
 நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதால் இது குறித்து பின்னர் முடிவு செய்யலாம் என திமுக கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவுடன்  வெ.கமலக்கண்ணனை பதவி இழப்பு செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments: