Thursday, April 30, 2015

On Thursday, April 30, 2015 by Unknown in ,    
திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு, மாநகரத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் பி.கோபால்சாமி, வெள்ளியங்கிரி, பொருளாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இதில், ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நீதி விசாரணை நடத்த வேண்டும். அதில், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கூடுதலாகக் கல்விக் கட்டணம் வசூலிப்பதை தமிழக அரசு  கட்டுப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு  உடனடியாக தீர்வு காணாமல், காலதாமதம் செய்து வரும் வருவாய்த் துறைப் பணியாளர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூரில், ஊத்துக்குளி சாலை டி.எம்.எப். மருத்துவமனை அருகே கட்டப்பட்டுள்ள பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு
உடனடியாக நிதி ஒதுக்கி, கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். மே 2-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள, தமிக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் வழங்கும் பேரணியில், திருப்பூரில் இருந்து கட்சியினர் திரளாகப் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சிப் பொறுப்பாளர் வி.ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.

0 comments: