Thursday, April 30, 2015

On Thursday, April 30, 2015 by Unknown in ,    
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நிலம் கையகச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 தாராபுரத்தில் இச்சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்டத் தலைவர் ஏ.காளிமுத்து தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாரத் தலைவர்கள் பி.வி.சாமிக்கண்ணு, ஓ.என்.கதிர்வேல், எஸ்.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தில்லியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜந்திர சிங்கிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
  இதில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி உயர்த்தப்பட்டிருப்பதை  மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய, மாநில வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
 தாராபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நஞ்சை நிலங்களை தனி நபர்கள்  விலைக்கு வாங்கி 100 அடிக்கும் கீழாக கிணறு வெட்டியும், ஆயிரம் அடிக்குக் கீழாக ஆழ்துளைக் கிணறு அமைத்தும் தண்ணீர் எடுத்து, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும்.
  உப்பாறு அணையின் பாசனப் பகுதியை பி.ஏ.பி. பாசனத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 comments: