Wednesday, June 13, 2018

On Wednesday, June 13, 2018 by Tamilnewstv   
திருச்சி வண்ணாரப்பேட்டையில் குடியிருக்கும் முருகையன் மகன் நாகராஜன் என்பவர் திருச்சி தில்லைநகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருக்கும் விஷயங்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் நவீன ஆள் பிடிக்கும் உத்தியையும் அதில் சிக்காமல் தப்பிக்க நினைப்பவரை எப்படிஎல்லாம் மிரட்டுகின்றனர் என்பதையும் தோலுரித்துக்காட்டியுள்ளது.

நாகராஜன் ஜூன் மாதம் 9 ந்தேதி திருச்சி வாசன் கண் மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கே கண் சிகிச்சை முடிந்து வெளியே வரும்போது ஒரு கூப்பனை கொடுத்துள்ளனர். அதில் திருச்சி தில்லைநகர் முதல் கிராசில் உள்ள வாசன் டென்டல் கேர் பல் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிப்பதாகக் கூறியுள்ளனர்.

விளக்கை நோக்கி நகரும் விட்டிலாய் நாகராஜனும் அங்கே போயுள்ளார். பதிவு கட்டணம் இல்லாமல் அவரிப் பரிசோதித்த மறுத்தவர் சிவகாமி, பல் கட்ட வேண்டுமா என்று கேட்டுள்ளார். ஆம் என்று சொன்னதும் மேலே ஒரு பல் கீழே ஒரு பல் இரண்டும் கட்ட ஒரு லட்சம் ஆகும் என்று சொல்லியுள்ளார் மருத்துவர். அதன் பின்னர் எக்ஸ் ரே எடுக்க நூற்றைம்பது ரூபாய் கட்டச் சொல்லியுள்ளனர். அந்த எக்ஸ்ரே பிலிமை கேட்டபோது சிகிச்சை எடுக்கும்போது தருவார்கள் என்று சொல்லியுள்ளனர்.

அடுத்து இந்த வைத்தியத்துக்கான எஸ்டிமேட் தருகிறோம் என்று சொல்லி கம்ப்யூட்டரில் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து அதில் வாசன் டென்டல் கேர் என்று லோகோவும் முகவரியும் இருக்கும் தலைப்புப் பகுதியை ஸ்கேல் வைத்து கிழித்து விட்டு வெறும் எஸ்டிமேட்டை மட்டும் கொடுத்துள்ளனர். அதை ஏன் கிழித்து விட்டு கொடுக்கிறீர்கள் நான் உங்களிடம் சிகிச்சைக்கு வந்ததற்கு தடயமே இல்லாமல் கொடுக்கிறிர்களே என்று கேட்டதற்கு இது கார்ப்பரேட் மருத்துவமனை இங்கு இப்படிதான் செய்வார்கள் என்று சொல்லியுள்ளனர். தர்க்கம் அதிகமானபோது மேலாளர்தான் அப்படி கொடுக்கச் சொன்னார் என்று சொல்லியிருக்கிறார்கள். மேலாளரை வரச் சொல்லுங்கள் என்று சொன்னதும் அங்கே வந்த கட்டம் போட்ட சட்டை அணிந்த நபர் யோவ் இது கார்ப்பரேட் ஆஸ்பிடல் இங்கே இப்படித்தான் தருவோம். நீ இன்னும் ட்ரீட்மெண்டே எடுக்கலை. முன்னாடியே ஒரு லட்சம் கட்டுன்னா கட்டுவியா ஒரு தடவை சொன்னா புரியாது நீ என்ன காட்டுப்பயலா என்று கேட்டபடி நாக்கைத் துருத்திக் கொண்டு அடிக்க வந்துள்ளார். பிறகு எக்ஸ்ரே எடுத்ததற்கு மட்டும் பில்லையும் எஸ்டிமேட்டையும்  கொடுத்து அனுப்பியுள்ளனர்.

கண் சிகிச்சைக்குப் போய் இலவசக் கூப்பனுக்கு ஆசைப்பட்டு பல் மருத்துவமனைக்குப் போய் 2 பல் கட்ட ஒரு லட்சம் கேட்டது மட்டுமல்லாமல் 2 பல்லுக்கு இவ்வளவா அதுவும் தலைப்பில்லாத எஸ்டிமேட்டா என்று கேட்டதுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி   உடனே காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார் அப்போது  திங்கள்கிழமை மருத்துவமனை ஆட்களை வரச் சொல்கிறோம் விசாரணைக்கு வாருங்கள் என்று சொல்லியுள்ளனர். தற்போது நடவடிக்கை எடுக்கக் கோரி நான் காவல்துறையிடம் மனு அளித்தோம் என் காவல்துறை அதிகாரிகள் தாமதம் செய்து வருகின்றனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது மேலும் பொதுமக்கள் யாரும் கார்ப்ரேட் மருத்துவமனை என்று ஏமாறக்கூடாது என்பது நோக்கத்தில் நான் மனு அளித்துள்ளேன் என்று கூறினார் நாகராஜன்

0 comments: