Thursday, June 14, 2018

On Thursday, June 14, 2018 by Tamilnewstv in    
திருச்சி மாநகர பெண் காவலர்கள் பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது


திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையம் மற்றும் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் திருச்சி துறையூர் சௌடாம்பிகா கல்விக்குழுமம் ஆகியோர் இணைந்து திருச்சிராப்பள்ளி மாநகரில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் துவங்கியது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது
இந்த முகாம் துவக்க விழாவில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி துணை இயக்குனர் மருத்துவர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார் திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ரேவதி பற்றிய விளக்க உரை ஆற்றினார் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் முனைவர் அமல்ராஜ் அவர்கள் திருச்சி விசாரம் கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் மருத்துவர் விநாயகம் அவர்கள் சௌடாம்பிகா கல்விக் குழுமத்தின் தலைவர் மருத்துவர் ராமமூர்த்தி திருச்சி மற்றும் ராமாபுரம் விசாலம் குழுமத்தின் தலைவர் மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சட்டம் ஒழுங்கு திருமதி நிஷா மயில்வாகனன் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்

0 comments: