Tuesday, June 26, 2018

On Tuesday, June 26, 2018 by Tamilnewstv in ,    
திருச்சி பத்தாண்டுகளுக்கு மேலாக அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்தவரை போலி மருத்துவரை கைது -  சுகாதார துறை இணை இயக்குனர் நடவடிக்கை.


திருச்சி உறைய10ர் ராமலிங்க நகர் பகுதியில் பத்தாண்டுகளுக்கு மேலாக முனாஃப் என்பவர் அக்கு பஞ்சர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் போலியாக மருத்துவம் பார்ப்பதாக திருச்சி மாவட்ட சுகாதார துறைக்கு புகார் ஒன்று சென்றுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் அவர் சிகிச்சை பார்த்து வந்த இடத்திற்கு சென்ற திருச்சி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ஷம்சாத் பேகம்மற்றும் சித்த மருத்துவர் காமராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அவரிடம் விசாரணை நடத்தி அவருடைய சான்றிதழ்களை கேட்டு பெற்றுள்ளனர். அவர் சான்றிதழின் நகலை மட்டும் தந்துள்ளார். தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் ஷம்சாத் பேகம் புகார் அளித்ததன் அடிப்படையில்  உறைய10ர் காவல்துறையினர் முனாஃபை கைது செய்து உறையூர் காவல்நிலையத்திற்க்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் சிகிச்சை அளிக்க பயன்படுத்தி வந்த இடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

தொடர்ந்து முனாஃப் அளித்த சான்றிதழ்களின் உண்மை தன்மை ஆராயப்படும் அவர் 1500ரூபாய் பணத்தை தனியார் நிறுவனத்தில் போலி சான்றிதழ் வாங்கி மருத்துவம் பார்த்து வந்ததாகவும்ää இதுகுறித்து புகார் அளித்தீன்பேரின் அவர்மீது நடவடிக்கை எடுக்கபட்டதாக என ஷம்சாத் பேகம் தெரிவித்தார். 

பேட்டி : ஷம்சாத் பேகம் இணை இயக்குனர்-திருச்சி மாவட்ட சுகாதார துறை

0 comments: