Tuesday, June 26, 2018

On Tuesday, June 26, 2018 by Tamilnewstv in ,    
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி               

திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி இணைந்து நடத்திய சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் இராசாமணி,மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ்,ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள் மேலும் திருச்சி மரக்கடை காந்தி மார்க்கெட் ஆய்வாளர் செந்தில்குமார் போக்குவரத்து ஆய்வாளர் முகம்மது ரஃபி ஆகியோர்ஏ ற்பாட்டில் சையது முத்தரச பள்ளியிலிருந்து பாலக்கரை வழியாக காந்தி மார்க்கெட் காவல் நிலையங்களில் சுற்றி சையத் முத்துராசா பள்ளியில் முடிவடைந்தது

இவ்விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது : 

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26ம் தேதி உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  போதைப்பொருள் உட்கொள்வதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். போதைப்பொருள் உட்கொள்வதால் மனிதன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் தான் பொதுமக்களிடையே போதைப்பொருள்கள் உட்கொள்வதால் வரக்கூடிய தீங்குகளை விளக்க வேண்டும்.  உலகம் முழுவதும் விபத்து மற்றும் பல்வேறு நோய்கள் மூலம் இறப்பதைவிட போதைப்பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.  புகையிலை பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு அபராதம் விதிக்கப்படும்.  பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் தங்களின் வீடுகளில் போதைப்பொருள் தீங்கு பற்றி விளக்க வேண்டும்.  பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் சுற்றி 100 மீட்டர் அல்லது 300 அடி சுற்றளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்.  போதைப்பொருள் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் பற்றி பொதுமக்களிடையே பல்வேறு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  

இந்தியாவில் தமிழகத்தை போதைப்பொருள் இல்லை என்ற மாநிலமாக மாற்ற நாம் முயற்சிக்க  வேண்டும்.  திருச்சி மாவட்ட மக்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எதையும் பயன்படுத்தக் கூடாது.  குறிப்பாக போதைப்பொருளை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அறவே ஒழிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்விழிப்புணர்வு பேரணியில் ஸ்ரீமத் ஆண்டவன், ஸ்ரீமதி இந்திரா காந்தி, புனித வளனார் கலை அறிவியல், குறிஞ்சி கலை அறிவியல், ஹோலி கிராஸ் கலை அறிவியல்,காவேரி கலை அறிவியல்,ஜமால் முகம்மது, பெரியார் நர்சிங், ஜென்னீஸ் நர்சிங், இந்திரா கணேசன், கிறிஸ்துராஜ் கலை அறிவியல் ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 2000-ம் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழிப்புணர்வு பேரணியில் செவிலியர்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் பதாகை ஏந்தியும் பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கியும் சென்றனர்.   

இப்பேரணியானது வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி மத்திய பேருந்து நிலையம்,ஸ்டேட் பேங்க் வழியாக திருச்சி ரெயில் சந்திப்பு நிலையத்தில் நிறைவடைந்தது

மேலும்,இவ்விழிப்புணர்வு பேரணியில் மாநகர காவல்துறை துணை ஆணையர் என்.எஸ்.நிஷா உதவி ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) கபிலன், கி.ஆ.பெ.அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் அனிதா, இந்தியன் ரெட்கிராஸ் சேர்மேன் திரு ராஜசேகரன், இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி செயலர் திரு ஜவஹர் ஹசன் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் தன்னார்வலர்கள் செவிலியர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: