Thursday, September 13, 2018

On Thursday, September 13, 2018 by Tamilnewstv   
திருச்சி      13.09.18



திருச்சி மலைக்கோட்டை

உச்சிப்பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையல்


விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மலைக்கோட்டையில் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படையலிடப்பட்டது.





திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில்கள் மிகவும் பிரசித்தமானவை. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த கோயில்களில் சிறப்பாக நடை பெறும்.




இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 150 கிலோ எடையில் கோயிலின் மடப்பள்ளியில் பிரம்மாண்டமான கொழுக் கட்டை தயார் செய்யும் பணி இருதினங்களாக நடைபெற்று வந்தது. இதனை சரிபாதியாகப் பிரித்து மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் படையல் செய்யப்பட்டது.

கோயிலின் மடப்பள்ளியில் இருந்து இந்த பிரம்மாண்ட கொழுக்கட்டையை துணியில் மூட்டையாகக் கட்டி தொட்டில் போன்று வைத்து அதனை உச்சிப் பிள்ளையார் சன்னதிக்கு தூக்கிச் சென்றனர்.

கொழுக்கட்டை படையல் போடப்பட்டு,மகா தீபாராதனை நடைபெற்ற பின்னர், அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.

0 comments: