Sunday, September 02, 2018

On Sunday, September 02, 2018 by Tamilnewstv   
திருச்சி        2.9.18

எம்.ஏ.ஆர் என்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா - 200 க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்கள்

திருச்சி விராலிமலை அருகே உள்ள என்ஜினியரிங் மற்றும் டெக்னாலாஜி கல்லூரியில் 6–வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள  ஆடிட்டோரியத்தில்  நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரி நிறுவனர் முகமது யூனுஸ் தலைமை வகித்து பேசினார். விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பதிவாளர்  டாக்டர் கோபிநாத் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்:

மாணவ, மாணவியர்களின் வாழ்க்கையில் பட்டம் பெறும் நாள் பொன்னாள்.பட்டம் பெற்ற பொறியாளர்களுக்கு பணியிடத்தில் பணிச்சூழல்களுக்கு கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு தனக்கு தகுதிக்கேற்ப நமது திறமையை வளர்த்துக் கொண்டு சுயநலம் பாராமல் திறம்பட செயல்பட வேண்டும்

விழாவில் எம்.ஏ.ஆர் மற்றும் எம்.ஐ.இ.டி கல்லூரி துணை தலைவர் அப்துல் ஜலீல் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக் கூறினர். கல்லூரி முதல்வர் குகராஜா வரவேற்புரையாற்றினார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றியுரையாற்றினார்.  மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 comments: