Tuesday, October 02, 2018

On Tuesday, October 02, 2018 by Tamilnewstv   

திருசசி   02.10.18

அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில் அனைத்து தேர்தல்களிலும் இஸ்லாமியர்களுக்கு தனித் தொகுதி வேண்டும் தலித் மக்களுக்கு இருப்பது போன்று இஸ்லாமிய மக்களுக்கு ரிசர்வ் தொகுதி வேண்டும் ஸ்டெர்லைட் ஆலை நியூட்ரினோ மீத்தேன் திட்டங்கள் எட்டு வழி சாலை போன்ற திட்டங்கள் மக்களால் எதிர்க்கும் திட்டங்களாகும் அதை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசியத் தலைவர் சாதிக் பாஷா அப்பாவா பாபா

தன்மான கலாச்சாரத்தை பாதுகாத்து வந்த நம் இந்திய திருநாட்டில் தற்சமயம் அதை சீர்குலைக்கும் விதமாக கள்ளத்தொடர்புகள் குற்றமில்லை ஓரினச்சேர்க்கை தவறில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
இந்திய கலாச்சாரத்தை காக்கும் வகையில் அகில இந்திய முஸ்லிம் லீக் உலகில் போராட்டத்தை நடத்தும்
பாபர் மசூதி தீர்ப்பு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது சர்ச்சைக்குரிய இடம் எனக் கூறப்படும் இடத்தில் மசூதி ராமர் கோயிலும் கட்டி இந்திய தேசம் ஒற்றுமைக்கு  இலக்கணம் என்பதை ஏற்படுத்த வேண்டும் என்றார், மேலும் உயர் நீதிமன்றத்தையும்,
உச்சநீதிமன்றத்தை மயிர் ஆவது என்று கூறிய ராஜாவை இதுவரை கைது செய்யப்படவில்லை, அவர் சொல்லிய கருத்து சரி என்றால் அவர் இந்திய தேசத்தின் பாதுகாவலன் தான் என்றார்.

0 comments: