Sunday, September 30, 2018

On Sunday, September 30, 2018 by Tamilnewstv in , ,    



திருச்சி_30.09.18

ஜனவரி ஒன்று முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும்-தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா பேட்டி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் திருச்சி புதுக்கோட்டை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம்,  அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து நடத்திய பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்,  திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா உள்ளிட்ட 100 க்கும்  மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்...

ஜனவரி ஒன்று முதல் பிளாஸ்டிக் பை உபயோகிக்க தடை என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் பணியை,  வியாபாரிகள் ஏற்றுக்கொள்ள தயார்.
பிளாஸ்டிக்கை பயன்படுத்தும்  பன்னாட்டு நிறுவனங்களை  அனுமதிக்கும் அரசு,  நம் நாட்டில் உள்ள 11 லட்சம் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை புதைக்க முயற்சிப்பது  கண்டனத்திற்குறியது.

வரும் 23 ஆம் தேதி கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு.
என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி

0 comments: