Sunday, September 30, 2018

On Sunday, September 30, 2018 by Tamilnewstv   
திருச்சி      29.09.18

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செயலாளர் ஜான் குமார் பேட்டி


ஜனநாயக ஜனதாதளம் (எல்.ஜே.டி.) நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் ராஜகோபால் தலைமையில் இன்று நடந்தது. இதில் மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில பொது செயலாளர்கள் வையாபுரி, ஹேமநாதன், இப்ராம்பால், மாவட்ட தலைவர்கள் அறிவழகன்,  உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாலை திருச்சி அண்ணா சிலை அருகே ஆர்பாட்டம் நடைப்பெற்றது.


இந்திய அரசு போர் விமானங்களை வாங்குவதில் மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது. இதில் மோடி ஊழல் நடைபெறவில்லை என்று நிரூபிக்க பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவிடம் புலனாய்வு செய்ய ஒப்படைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு 100 முறை உயர்ந்துள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகள் வரியை பாதியாக குறைக்க வேண்டும். அப்படி குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். 1838–ல் கட்டப்பட்ட முக்கொம்பு அணை உடைந்து விட்டது. இதில் புதிய அணை கட்ட சர்வதேச அளவில் மிகப்பெரிய தொழில் நுட்பம் கொண்டதாக டெண்டர் விட வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடர்வோம். மேலும் மணல் கொள்ளையை தடுக்க 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை என தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலை என கூறி மத்திய அரசு ஏமாற்றிவிட்டது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் நலன் கருதி டாக்டர் சாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும். விரைவில் மழைக்காலம் வர இருப்பதால் ஏரி குளங்களை தூர் வார வேண்டும்.

திருச்சி மாநகராட்சியில் அதிக அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரிய வருகிறது. இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

0 comments: