Tuesday, October 16, 2018

On Tuesday, October 16, 2018 by Tamilnewstv   
திருச்சி - 16.10.18

உலக உணவு தினத்தையொட்டி சத்தான உணவை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி - உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

அனைவருக்கும் சத்தான சரிவிகித உணவு கிடைக்கப் பெற வேண்டும், கலப்பட உணவுப் பொருட்களை  கண்டறிந்து  அவற்றை தடுக்கப்பட வேண்டும், ஆயுளைக் குறைக்கும் துரித உணவுப் பொருட்களை தவிர்த்துவிளம்பர மோகத்தில் இருந்து வெளியேறி இயற்கை உணவுகளையும் சத்தான உணவுகளையும் பொது மக்கள் உண்ண வேண்டும் என்ற கோட்பாட்டுடன் உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனிடையே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருச்சியில் அனைவரும் சரிவிகித நஞ்சில்லாத உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும், சுகாதாரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு குறித்த வீதி நாடகத்தை அரங்கேற்றினார் மேலும் அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழ சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தென்னூர் வரையிலான இருசக்கர வாகன பேரணி சென்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தடைசெய்யப்பட்ட பொருட்கள் விநியோகம் செய்வதை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை உணர்ந்து உணவு தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவார்கள் சட்டங்களை முழுவதும் பின்பற்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அதனை அனுமதிப்பதை தடை செய்யப்படும், கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

பேட்டி - திரு.கு.ராசாமணி, மாவட்ட ஆட்சியர்

0 comments: