Wednesday, October 17, 2018

On Wednesday, October 17, 2018 by Tamilnewstv   
திருச்சி கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 10 தியேட்டர்களில் திருட்டு விசிடி எடுத்து படத்தை விற்பனை செய்து வந்ததாகவும் இது கண்டறியப்பட்டதால் அந்தத் திரையரங்கங்களுக்கு படங்களை மாட்டோம் என்றும் 10 திரையரங்கம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே பொதுமக்கள் வருகை குறைந்து இரட்டை வரி வசூல் மற்றும் பல்வேறு காரணங்களால் தியேட்டர்கள் மூடப்பட்டு வரும் நிலையில் திரையரங்கங்களின் நலனையும் திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வரும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷாலின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் நடித்து நாளை வெளியாகவுள்ள சண்டக்கோழி 2 படத்தை வெளியிட மாட்டோம் என்று திருச்சி தஞ்சை கரூர் மாவட்ட விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 130 தியேட்டர்களில் 40 தியேட்டர்களில் விஷால் படம் திரையிடப்படுவதாக இருந்தது. விஷால் திரைப்படம் வெளியிடுவது ரத்து செய்யப்படுகிறது. திரையரங்குகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும்வரையில் விஷால் திரைப்படத்தினை திரையிட மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்தனர். போன்று தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் விஷாலின் படம் வெளியிடப்படாது என்றும் தெரிவித்தனர்

0 comments: