Monday, June 24, 2019

On Monday, June 24, 2019 by Tamilnewstv in ,    
திருச்சி   ஜூன் 24

பொறியியல் படிக்கும் மாணவனுக்கு வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.


தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கம்



 இவற்றில் நடத்த உள்ள ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று தொலைநோக்கு - 2019 என்ற பெயரில் திருச்சி அரசு கலையரங்கம் அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது.


தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம் மற்றும் செயலாளர் டாக்டர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் துறை தலைவர் அன்புத்தம்பி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஜிபிஎஸ் நிறுவனத்தில் முதுநிலை மேலாளர் ராஜகோபாலன், கே7 கம்ப்யூட்டர் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி புருஷோத்தமன், அரசு தொடக்க கல்வி இயக்கத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர்  மாணவர்களுக்கு விளக்க உரையை வழங்கினார்.

இக்கத்தரங்கில்
நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் முறையானது அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து அரசு தொழில்நுட்பக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த விழிப்புணர்வையும், செயல்முறைவிளக்கங்களையும்,  மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் வேலை வாய்ப்பு  என்பது பொறியியல் படிப்பிலோ அல்லது பாடத் திட்டத்தில்லை மாணவர்கள் பொறியியல் பட்டப்படிப்போடு அத்துறை சார்ந்த புதிய தொழில் நுட்ப்பங்கள், அயல்நாட்டு மொழிகள், skills எனப்படும் மென்திறன்கள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு கிடைப்பது நிச்சயம் என்பதை விளக்கி கூறினர்.
இக்கருத்தரங்கில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் 1500-க்கும் மேற்பட்டோர்் கலந்து கொண்டனர்.


பேட்டி:
1) புருஷேத்தம்மன்,
2) முனிராஜ்

0 comments: