Saturday, August 10, 2019

On Saturday, August 10, 2019 by Tamilnewstv   
திருச்சி: தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடந்த அமெரிக்க-இந்திய அரசியலமைப்பு ஒப்பீடு விவாத நிகழ்ச்சியில் நான்கு பேர் வெற்றிபெற்றனர்.


இந்திய - அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட ஒப்பீடு விவாதப்போட்டி திருச்சியில் உள்ள தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது


இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 73 மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். இந்தப் போட்டியில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த மாணவர் பாலா, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் ஜமுனா, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேவ்திப்ஸா தாஸ் ஆகிய 4 பேர் வெற்றி பெற்றனர்

சட்ட ஒப்பீடு விவாதப்போட்டிஇவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். முன்னதாக இப்போட்டி கொச்சி,பெங்களூரு ஆகிய இரு நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த விவாத நிகழ்ச்சியின் மூலம் இரு நாடுகளின் அரசியலமைப்பு சட்டங்கள் குறித்து மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். விமர்சனப் பார்வையில் அணுக வழிவகுக்கும். பொது மக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த விவாத நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

0 comments: