Tuesday, July 30, 2019

திருச்சி ஜூலை 30

தொண்டர்கள் பலமுறை வற்புறுத்தியும் நேரில் சென்று முறையிட்டும் கட்சிப் பணிகளை மேற்கொள்ளாத தீபாவை கண்டித்து திருச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர் சி கோபி தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைய முடிவு?

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.சி. கோபி பேட்டி


மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் உறவினரான தீபா ஜெயலிதா மறைந்த பின்னர் தனியாக
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என இயக்கம் ஆரம்பித்து அதில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமித்து  நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை ஆதரிப்பதாக தெரிவித்தார். தேர்தல் முடிந்த பின்னர் தொடர்ந்து தீபாவின் செயல்பாடுகள் ஒன்றும் இல்லாமல் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில்தான் திருச்சி மாவட்ட செயலாளர் கோபி தீபாவை  தொடர்புகொண்டு கட்சியின் நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கூறியதாகவும் இதன் காரணமாக அவரை கட்சியை விட்டு நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று
செய்தியாளர்களை
சந்தித்த ஆர்.சி.கோபி

திபாவை சந்தித்து இயக்கத்தை செயல்படுத்த பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கை எடுக்காததால் கட்சியை விட்டு வெளியேறினேன்.  மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த  மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர், அவர்களுடைய கருத்தை அறிந்து புதிய அமைப்பை துவங்குவது அல்லது அனைவரும் ஒன்றிணைந்து முதல்வர் எடப்பாடி தலைமையில்  அதிமுகவில் இணைய உள்ளதாகவும், தங்களுக்கு நல்ல ஒரு பதவி கிடைத்தால் செயல்பட தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

0 comments: