Friday, August 23, 2019

On Friday, August 23, 2019 by Tamilnewstv in ,    



.திருச்சியில்  கியூ மெட் மருத்துவமனையில் இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை ..


கியூ மெட் மருத்துவமனை அளவே பல்நோக்கு மருத்துவமனையாக கடந்த இரண்டரை வருடமாக திருச்சி யில் மையப்பகுதியான புத்தூரில் செயல்பட்டு வருகிறது ,முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் பல மருத்துவத் துறைகளில் கீழ் ஏழை எளிய மக்களுக்கு கட்டணமில்லா இலவச மருத்துவம் அறுவை சிகிச்சைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது இதற்கு அடுத்தபடியாக சில நேரங்களில் அந்த ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக ரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) செய்வதற்கு ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சேவையை ஏழை நோயாளிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கியூ மெட்  மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

சிறுநீரக செயலிழப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இன்னும் சரியாக சென்றடையவில்லை எனவும் சிறுநீரக செயலிழப்பு என்பது சாதாரண விஷயம் எனவும் அதனை குணப்படுத்தி விடலாம் எனவும் முறையாக சிகிச்சை பெற்றால் அதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் எனவும்
கியூ மெட் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்
.

0 comments: