Saturday, September 28, 2019

28.09.2019 சனிக்கிழமை

திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தமிழரின் பாரம்பரிய தற்காப்புக்கலையான சிலம்பக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக மாநில அளவிலான சிலம்ப போட்டியை உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் மற்றும் சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடம் இணைந்து நடத்தியது.

இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள், சிலம்ப பயிற்சியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியானது மழலையர் (2-ம் வகுப்புவரை), மினி சப்ஜூனியர் (3 முதல் 5ம் வகுப்புவரை), சப்ஜூனியர் (6 முதல் 8ம் வகுப்புவரை), ஜூனியர் (9 மற்றும் 10ம் வகுப்பு), சீனியர் (11 மற்றும் 12ம் வகுப்பு) மற்றும் சூப்பர் சீனியர் (கல்லூரி மாணவ மாணவியர்கள்) ஆகிய பல பிரிவுகளில் நடைபெற்றது.

இதில் குத்து வரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக்கம்பு வீச்சு மற்றும் கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் இப்போட்டியில் தேர்வாகியிருக்கும் சுகித்தா, சுஜீத், ஸ்ரீ மாலன் ஆகிய சிலம்ப வீரர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியில் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சர்வதேச சிலம்பப் போட்டிக்கு சிலம்பப் பயிற்சியாளர் திரு.அரவிந்த் மற்றும் சுருளி ஆண்டவர் சிலம்பக்கூடத் தலைவர் திரு.மோகன் ஆகியோர் அழைத்துச்செல்வர்.

இன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக டால்மியா சிமென்ட் வாழ்நாள் இயக்குனர் திரு. Er. N. கோபால்சுவாமி மற்றும் தலைவர் கி.ஆ.பெ. விசுவநாதம்பள்ளி டாக்டர்.V.ஜெயபால்,  அவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களைப் பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்.

மேலும் இப்போட்டியை திரு. தமிழ்மகன் (எ) கண்ணன் (தலைவர், உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம்) அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.

காலை 9:30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு சுருளி ஆண்டவர் தற்காப்புக் கலைக்கூடத்தின் தலைவர் திரு. மோகன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.

இந்நிகழ்ச்சியை திருச்சி தில்லைநகரிலுள்ள சகுந்தலா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிர்வாகத்தினர் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

0 comments: